சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 35,873 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் முழுவதும் இன்று புதியதாக 35,873 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5559 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,06,861 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில், 448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 169  தனியார் மருத்துவமனையில் பேரும், அரசு மருத்துவமனையில் 279 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 20,046 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

இன்று மட்டும் 25,776 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15,02,537 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,75,23 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது.