புதுடெல்லி:
சுசுந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 25 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
காவல் துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள், நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய 2 நாள்களில் குடியரசுத் தலைவரின் விருதுகள் அகில இந்திய அளவில் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன.
இதன்படி, கூடுதல் காவல் இயக்குநர் (நலன்) கன்னு சரன் மாஹாலி, சென்னை பெருநகரக் காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையர் சு.அருணாசலம், சென்னை சிறப்புப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் க.சங்கர் ஆகிய 3 பேர் தகைசால் பணிக்கான (Presidents Police Medal for Distinguished Service) விருதுகளைப் பெறுகின்றனர்.
இதுதவிர, குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான (Presidents Police Medal for Meritorious Service) காவல் விருதுகள் 22 பேருக்கு வழங்கப்படுகின்றன.
காவல் துறைத் தலைவர் (செயலாக்கம்- சென்னை) எச்.எம்.ஜெயராம், துணைத் தலைவர்கள் (ஆ.அருண்-திருச்சி சரகம்) செ.சந்திரசேகர் (முதன்மை கண்காணிப்பு அதிகாரி டிஎன்பிஎல், கரூர்), தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தளவாய் கமாண்டென்ட்
ஜெ.ரவீந்திரன் ((15-ஆவது அணி- வேலூர்), துணை ஆணையர் வ.ஜெயக்குமார் (ஆயுதப்படை-2, செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை), கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மா.ரங்கராஜன் (திருவண்ணாமலை), ந.ராஜராஜன் (முதல்வரின் தனிப்பிரிவு பாதுகாப்பு பிரிவு), ஸ்ரீ.மாரிராஜன் (சிறப்பு புலனாய்வு பிரிவு குற்றப்பிரிவு- குற்ற புலனாய்வுப் பிரிவு).
துணை கண்காணிப்பாளர் வே.மதி (குற்ற ஆவணக் காப்பகம்-திருச்சி).
உதவி ஆணையர்கள் கே.பரந்தாமன் (ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சரகம், சென்னை), மு.முத்துசங்கரலிங்கம் (நுண்ணறிவுப் பிரிவு, மதுரை மாநகரம்), கு.அருள் அமரன் (கண்டோன்மென்ட் குற்ற சரகம், திருச்சி மாநகரம்),
துணைக் கண்காணிப்பாளர்கள் ஆர்.விஜயராகவன் (ஊழல் தடுப்பு-கண்காணிப்புத் துறை, சென்னை), கோ.ராஜசேகர் (தலைமையிட கட்டுப்பாட்டு அறை, சென்னை), ச.முத்துக்குமார் (தனிப்பிரிவு, குற்றப்புலனாய்வுத் துறை சென்னை), கே.ரவி (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை- சென்னை), பொ.பரமசிவம் (சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு, கோயம்புத்தூர்),
ஆய்வாளர்கள் சு.முருகேசன் (கொடுமுடி-ஈரோடு), எஸ்.கிருஷ்ணமூர்த்தி (ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை- விழுப்புரம்), பெ.பெரியசாமி (தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14-ஆவது அணி, பழனி), ம.பாஸ்கரன் ((தொழில்நுட்ப நுண்ணலை முனையம், காவல் தொலை தொடர்புத் துறை, சென்னை).
சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆர்.கேசவரம் (ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை- ராமநாதபுரம்).
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.