இந்தியா முழுவதும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்! பிஎஸ்என்எல் அதிரடி சலுகை!!

Must read

புதுடில்லி:
70வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் போன் ஞாயிற்றுக்கிழமைதோறும் இலவச அழைப்புகளை வழங்குகிறது.
சுதந்திரதினமான இன்று முதல் (ஆகஸ்ட் 15)  பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் லேன்ட் லைன் வாயிலாக இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும் என பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனம் அறிவித்துள்ளது.
bsnl
பிஎஸ்என்எல் செய்தி குறிப்பு:   ‘ஏற்கனவே, லேன்ட் லைன் வாயிலாக இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளையும் இலவச அழைப்புகளாக பி.எஸ்.என்.எல். கணக்கிட்டு வருகிறது.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் நலன்கருதி  இன்று முதல் ( 15-ம் தேதி)  இருந்து பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும்  ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள்  அனைத்தும்  இலவச அழைப்புகளாக கருதப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திரதின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட் லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் நிர்மாணக் கட்டணம் (இன்ஸ்ட்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் இதர வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும் எனவும் அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article