சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் உலக சாம்பியன்ஷிப் கேண்டிடேட்ஸ் போட்டியில் கலந்துகொண்டு, சாம்பியன் பட்டம் வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இளம் வயதில் சாம்பியனாவர் குகேஷ் என்பது கு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது . அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
2014 இல் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும், இளம் வீரர் என்ற பெருமைக்கும் தமிழக வீரர் குகேஷ் சொந்தமாகி உள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள், செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு உலக அளவில் சாதனைகளை படைத்து வருகின்றனர். ஏற்கனவே செஸ்வீரர் ஆனந்த் ஏராளமான பட்டங்களை பெற்ற நிலையில், சமீபகாலமாக, தமிழக வீரர் பிரஞ்ஞானந்தா, அவரது சகோதரி ஆகியோர் உலக அளவில் பல்வேறு சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்று, தமிழ்நாட்டுக்கும், உலகுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்வீரர் 17 வயதான குகேஷ் செஸ் போட்டிகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். குகேஷ் அவரது 12 வயதில், இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார். உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை வெறும் 17 நாட்களில் அவர் தவறவிட்டார். ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வகித்து வந்த நாட்டின் முதல் நிலை விரர் என்ற பட்டத்தை, 36 ஆண்டுகளுக்குப் பிறகு பறித்து குகேஷ் சரித்திரம் படைத்தார். .
🇮🇳 Gukesh exiting the venue after winning the 2024 #FIDECandidates! 🔥 🤩 pic.twitter.com/REZMIfOO9q
— International Chess Federation (@FIDE_chess) April 22, 2024
இந்த நிலையில், கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நகமுராவை எதிர்கொண்டார். போட்டி சமனில் முடிய இருவரும் தலா அரை புள்ளிகளை பெற்றனர். அதன்படி, 14 சுற்றுகளின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகளையும், நகமுரா 8.5 புள்ளிகளையும் பெற்றனர்.
இதன் மூலம், உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் போட்டியில் சீனாவைச் சேர்ந்த டிங் லிரென எதிர்கொண்டார். அதோடு, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் குகேஷ் தனதாக்கினார்,. தொடர்ந்து,. இறுதிச் சுற்றில் டிங் லிரெனை வீழ்த்தி, கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார் குகேஷ்.
சர்வதேச செஸ் அரங்குகளில் மதிப்புமிக்கதாக கருதப்படும், கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது இளம் வயது வீரரான சென்னையைச் சேர்ந்த 17 வயதான டி குகேஷ், அந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வயது வீரர் என்ற புகழையும் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய விஸ்வநாதன் ஆனந்த், “ செஸ் இன்ஜினை பயன்படுத்தாத அணுகுமுறையால் குகேஷ் தனித்துவமனான நபராக இருக்கிறார் என்று நான் யூகிக்கிறேன். இது மிகவும் ஆரோக்கியமான அணுகுமுறை. முக்கிய விஷயம் என்னவென்றால், அவர் இன்ஜின்களைப் பயன்படுத்தவில்லை, இருப்பினும் அவரது பயிற்சியாளர் மூலம் பயனடைந்தார். அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு வீரர் விளையாடும் திறமையில் கவனம் செலுத்த வேண்டும், பயிற்சியாளர் சிறந்த தகவலை அவர்களுக்கு வழங்க முடியும், ”என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.