சென்னை,

மிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பெற்ற எம்பில் மற்றும் பிஎச்டி பட்டம் செல்லும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது,

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் நேரடிமுறையில் பெறப்பட்ட எம்பில், பிஎச்டி பட்டம் செல்லும். அரசு, அரசு சார் நியமனம், பல்கலை., கல்லூரிகளில் பணி நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றிற்கு இந்த பட்டங்கள் செல்லும்.

முதலில் யூஜிசி அங்கீகரித்த பல்கலை.,யில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பின்னர் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் முழு நேர அல்லது பகுதி நேரத்தில் சேர்ந்து ஆய்வு பட்டம் பெற வேண்டும்.

அரசு, அரசு சார்பு நிறுவனங்களில் பணியில் சேர பட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.