டிசம்பர் முதல் தேதியிலிருந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கிறது. இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக மற்றும் புதுச்சேரி கரையோரங்களை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யலாம் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மீனவர்கள் நவம்பர் 30-ஆம் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தபட்டுள்ளனர்.
டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் நாகபட்டிணம் மற்றும் மகாபலிபுரம் பகுதிகளில் கனத்த மழை பெய்யக்கூடும் என்று “சென்னையில் ஒரு மழைக்காலம்” என்ற வானிலை இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இந்த கனமழை கடந்த ஆண்டு இதே நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை நினைவுபடுத்தும் விதத்தில் இருக்கும். ஆனால் இது அந்த அளவுக்கு கொடூரமாய் இருக்காது என்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.