தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 5:30 மணியளவில் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.

cyclone_rain

இது மையம் கொண்டுள்ள இடம் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 1070 கி.மீ தூரத்தில் அதாவது அட்சரேகை 6.5°N மற்றும் தீர்க்கரேகை 87.5 ° E ஆகும்.இது புதுச்சேரியிலிருந்து 1030 கி.மீ தென்கிழக்கிலும், இலங்கையின் திரிகோணமலைக்கு 720 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

cyclone_rain1

இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசைநோக்கி நகரக்கூடும் என்று தெரிகிறது. இது சரியாக டிசம்பர் 2-ஆம் தேதி வேதாரண்யம் மற்றும் சென்னை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.