டில்லி

திக அளவில் பெண் தொழில் முனைவோர் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

உலகெங்கும் சமீப காலமாக பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் உள்ளனர்.   இவர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் மற்றும் உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.   இது குறித்து ஷீட்வொர்க் என்னும் நிறுவனம் ஒரு கணக்கெடுப்பை எடுத்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் உள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது.   அதற்கு அடுத்தபடியாக கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள்  உள்ளன.  இந்த பெண் தொழில் முனைவோரில் 80% பேர் தங்கள் தொழிலுக்கு அதிக அளவில் சொந்த நிதியையும் ஓரளவுக்கு அரசு உதவியையும் பெற்று வருகின்றனர்.

பெண் தொழில் முனைவோருக்கு அதிக அளவில் நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அளிக்கும் முதல் ஐந்து மாநிலங்களாகக்  கோவா காஷ்மீர், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.    இது போல் மற்ற மாநில அரசுகளும் மத்திய அரசுகளும் பல்வேறு உதவித் திட்டங்கள் அறிவித்தும்  இது குறித்து பலருக்குத் தெரியாத நிலை உள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ள்டு.

இந்த பெண் தொழில் முனைவோரில் பெரும்பாலானோர் கல்வி நிலையங்காலை நடத்தி வருகின்றனர்.  அதைத் தொடர்ந்து நிதி நிறுவனம், காப்பீடு, கால்நடை வளர்ப்பு, உணவு மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்    இந்தியாவில் அருணாசலப் பிரதேசம், மேகாலயா, மற்றும் நாகாலாந்து  மாநிலங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பெண் தொழில் முனைவோர் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.