சென்னை: தமிழ்நாடு அரசு மாணவர்களை வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.   ஒவ்வொரு பள்ளியும் கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளில் சிறந்து விளக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இந்த கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என கூறியதுடன், அதில் தேர்வு பெறும்  மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறியதுடன்,  அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வந்தனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இலக்கிய மன்றத்தின் மூலம் கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தி பள்ளிகளுக்கிடையே போட்டியில் வெற்றிபெறும் சுமார் 15 மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படுவர்.

கடந்தாண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “பள்ளி அளவில் கல்வி, இணைச்செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக, தேசிய, மாநில அளவிலான கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். கொரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் செயல்படாத பல்வேறு மன்றங்களை புதுப்பித்து அவை சிறப்பாக நடைபெற வழிவகை செய்யப்படும் என அறிவித்தார்.

இதை நடைமுறைப்படுத்தும் வகையிலும், திறன்களை வெளிப்படுத்தி மாணவர்களை வெளிநாடு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்காகவும் பள்ளி வகுப்பறைகளில் ஒவ்வொரு வாரமும் கலை செயல்பாடுகளுக்கென இரு பாடவேளைகளும், மன்றச்செயல்பாடுகளுக்கென இருபாட வேளைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு வழிகாட்டி செயல்முறைகள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் பல்வேறு பள்ளிகளில் செயல்படுவதைபோல், வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், பேரிடர் மேலாண்மை மன்றம் உள்ளிட்ட மன்றங்களை அமைத்து வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் கடைசி இரு பாடவேளைகளில் அவற்றை செயல்படுத்த வேண்டும். இச்செயல்பாடுகள் 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இருக்கும் வகையில் கால அட்டவணையில் கொடுத்துள்ளபடி செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் சுழற்சி முறையில் இந்த மன்றங்களின் செயல்பாடுகளின் அனைத்து ஆசிரியர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.

இலக்கிய மன்றத்தின் மூலம் கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தி பள்ளிகளுக்கிடையே போட்டியில் வெற்றிபெறும் சுமார் 15 மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படுவர். அவர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும். மாணவர்களே தயாரிக்கும் வினாடி-வினா புதிர் போட்டிகளையும் மாநில அளவில் நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களும் வெளிநாடு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர். சூழல் மன்றத்தை சிறப்பாக நடத்தும் பள்ளிகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும். மாநில அளவில் நடைபெறும் பள்ளி புத்தாக்கத்திட்டப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு இளம் கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்படும்.

ஓவியம், ஓரிகாமி, சிறார் திரைப்படம் திரையிடல், நாடகம், இசை, வாய்ப்பாட்டு, நடனம் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். அனைத்து மாணவர்களின் படைப்புகளையும் ஆவணப்படுத்த வேண்டும். சிறார் திரைப்படம் திரையிடப்படும்போது, மாணவர்களை அதுகுறித்து பேச செய்ய வேண்டும். திரைப்பட விமர்சனத்தை எழுதவைக்க வேண்டும். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளக்கும் மாணவர்கள் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவுக்கு போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். அவர்களில்15 பேர் வெளிநாடு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர்.

இசை, வில்லுப்பாட்டு நடனம் கரகாட்டம் ஒயிலாட்டம், கும்மி, கோலாட்டம், கிராமிப்பாடல் போன்றவற்றில் மாநில அளவில் சிறந்து விளக்கும் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர். இவற்றிற்கு ஏற்ப அந்தந்த பள்ளிகளில் பாடவேளைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.