சென்னை:

டிசாவை புரட்டிப்போட்ட ஃபானி புயலால் அங்கு வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்ததுள்ளது. அங்கு நிவாரண பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு வரும் நிலையில், ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசு, 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஃபானி புயல், புனித நகரம் பூரி உட்பட பல்வேறு நகரங்களை, வார்த்தைகளில் விவரிக்க இயலாத அளவுக்கு, கடுமையான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஒடிசாவில் ஃபானி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியளவிலான இழப்பை எதிர்கொண்டுள்ள ஒடிசாவின் துயரத்தையும், அம்மாநிலத்தின் இழப்பையும் பகிர்ந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், ஒடிசா மாநிலத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.

ஒடிசா மாநிலத்திற்கு தேவைப்படும் மற்ற உதவிகளையும் செய்வதற்கு, தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.