டெல்லி: சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை தாமதத்துக்கு தமிழ்நாடு அரசே காரணம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின்கட்கரி பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். மேலும்,   இந்தாண்டுக்குள் நிறைவடையும் என உறுதி அளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. தயாநிதி மாறன்,  மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தநிதின் கட்கரி அவர்கள் மிகவும் சுறுசுறுப்பான அமைச்சர், அனைத்து தரவுகளையும் விரல் நுனியில் வைத்திருக்கக்கூடியவர். இந்நிலையில் சாலை விரிவாக்க முன்னோடித் திட்டங்கள் குறித்து கேள்விகளை இரண்டு பகுதிகளாக உங்களிடம் எழுப்ப நான் விரும்புகிறேன்.

சென்னை – பெங்களூரு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 100 கிலோ மீட்டரைக் கடப்பதற்கு 4 மணிநேரம் ஆகிறது. சாலையில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணிகளின் நிலை என்ன, விரைவுச் சாலை பணியின் நிலை என்ன என்றும், மத்தியஅரசின் திட்டங்களுக்கு தேவையான அனைத்து நிலங்களும் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், உங்களது ஒப்பந்ததாரர்கள் ஏதேதோ காரணங்களை சொல்லி நீதிமன்றத்திற்கு சென்று காலம் தாழ்த்தி வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.

இதற்கு  மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘திட்டங்களை செயல்படுத்தி முடிக்க மத்திய அரசுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை’ என்றார். ‘விரைவுச்சாலையின் பணிகள் பெங்களூருவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில்தான்  நிலமோ, அனுமதியோ வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பு என்றவர், முறையாக நிலம் வழங்காமல்,   ஒப்பந்ததாரர்களால் எப்படி வேலை பார்க்க முடியும்’ என்ன கேள்வி எழுப்பியவர், திட்டங்களை செயல்படுத்தி முடிக்க மத்திய அரசுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை’ என்றவர், இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என கூறினார்.