சென்னை: தமிழகஅரசு மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் முதுகலை படிப்பு மருத்துவ மாணவர்களுக்கான ஸ்டைபண்டு உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில், பயிற்சி மருத்துவர்கள், முதுநிலைப் பட்டம் பயிலும் மருத்துவர்கள், முதுநிலை டிப்ளமோ பயிலும் மருத்துவர்கள், சிறப்பு படிப்பு மற்றும் நரம்பு அறுவை சிகிச்சை முதுநிலை பட்டம் பயிலும் மருத்துவர்கள் என பயிற்சி காலத்தில், மாதந்தோறும் அளிக்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஏற்று, அரசாணை வெளியிட்டு உள்ளது. அவர்களின் பயிற்சி கால உதவித் தொகை உயர்த்தப்படுகிறது

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கட்டாய சுழற்சி குடியிருப்பு பணியாளர்கள் (சிஆர்ஆர்எல்),  முதுகலை பட்டப்படிப்பு/ டிப்ளமோ மற்றும் உயர் சிறப்பு (டிஎம்/ எம்சிஎச்) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை அரசு  திருத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.