டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கார காரணத்தினால், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி  6வாரக்காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், கெடு 29ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில்,  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்காததால்,  மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் மத்திய அரசு சார்பில் ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.