சென்னை:

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக   எழுந்த மோதலை தொடர்ந்து இரு அணிகளாக பிரிந்தது. இதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தமிழக அரசு கைப்பற்றி  தனி அதிகாரி நியமித்துள்ளது.

அரசின் அதிரடி நடவடிக்கையை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிகிறது.

தமிழ்த் திரைப்படத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில்100க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக நடிகர்  விஷால் உள்ளார்.  இவர்களின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. புதிய நிர்வாகிகளை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக, விரைவில் பொதுகுழு கூடி முடிவு செய்ய இருக்கிறது.

இதற்கிடையில், தயாரிப்பாளர் சங்கத்தில்,  ரூ.7 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக, விஷால் தலைமை மீது,  எதிர்த்தரப்பினர் புகார் கூறினர்.இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போடப்பட்ட பிரச்சினை பெரிதானது.  . இதற்கிடையே, விஷாலுக்கு எதிரான தயாரிப்பாளர்கள் சிலர் சேர்ந்து,  முதல்வர் பழனிசாமியை சந்தித்து, சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமிக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து,  திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சேகர் என்ற தனி அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விஷால், தமிழகஅரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நியமிக்கப்பட்ட அரசு தனி அதிகாரி சேகரின்  “அரசு தனி அதிகாரி நியமித்தது சட்டப்படி தவறு“  என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில்
எந்த முறைகேடும் நடைபெறாத நிலையில், தனி அதிகாரி நியமித்தது சட்டப்படி தவறு என்று விஷால் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.