சென்னை,
மிழக அரசின் இணையதளம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டதாக சமூக வளைதங்களிலும், ஆன்லைன் செய்தி நிறுவனங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
ஆனால், இது தவறான செய்தி என்பது உறுதியாகி உள்ளது
இதுகுறித்து வந்த செய்தி:
hackers
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tn.gov.in என்ற இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இது  பாகிஸ்தான் தீவிர வாதிகளின்  கைவரிசை என கூறப்படுகிறது.
தமிழக அரசின் அறிவிப்புகள், அரசின் முக்கிய தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம்பெறும். இந்த இணையதளத்தின் சில பக்கங்கள் நேற்று முடக்கப்பட்டு செயல்படவில்லை. அந்த பக்கம் பச்சை நிறத்தில் PAK CYBER SKULLZ என்ற வாக்கியத்துடன் இடம்பெற்றது.
அந்த பக்கத்தில் பாகிஸ்தான் சைபர் என்ற வாக்கியம் இடம்பெற்று இருப்பதால் இது பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இணையதளம் உள்பட பல முக்கிய இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்தி செய்தி வெளியாகிய நேரத்தில், நாம் பார்த்தபோது,  தமிழக அரசு இணையதளம் நன்றாக இயங்கிவருகிறது.
தமிழக அரசு இணையதளம் முடங்கியதாக தமிழக அரசோ, தமிழக சைபர் கிரைமோ இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில்
தற்போது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tn.gov.in செயல்பட்டு வருகிறது என்பதை பத்திரிகை.காம் மக்களுக்கு தெரியப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.
tngov