எடப்பாடிக்கு அழைப்பு… அ.தி.மு.க.வுக்கு அழிவு : கட்ஜூ யூகம்

Must read

ற்போதைய சூழலில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் தி.மு.க.வே வெற்றி பெறும் என்று  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி உச்சமடைந்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் சார்பில் முதல்வராக முன்னிறுத்தப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார் தமிழக ஆளுநர் வித்யாசாகர்.

இதற்கிடையே,  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ , “தற்போதைய சூழலில் தமிழகத்தில்  சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றால்  தி.மு.க தான் வெற்றி பெறும்’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “சசிகலாவுக்கு  நெருக்கமானவரை சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததன் மூலம் அ.தி.மு.க அழிவுப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. இன்று தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றால், தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை’ என்று  தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கட்ஜூ.

ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்கும் முன்பே – அவரை அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்த போதே – இக் கருத்தைத் தெரிவித்துவிட்டார் கட்ஜூ.

More articles

Latest article