ரியோ: பிரேசிலில் நடைபெற்று வரும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீராங்கனை 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி வரும் மே மாதம் 1-ம் தேதி முதல்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டி வரும்  15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் சமீஹா பர்வீன் (நீளம் தாண்டுதல்), ஆர்.சினேகா (நீச்சல்), ஜெர்லின் அனிகா (இறகுப்பந்து தனிநபர்) மற்றும் வீரர்கள் கே.மணிகண்டன் (நீளம் தாண்டுதல்) ஆர்.சுதன் (மும்முனை தாண்டுதல்), பிரித்வி சேகர் (டென்னிஸ் தனிநபர்) ஆகிய 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அங்கு நடைபெற்ற இறகுபந்து (பேட்மிண்டன்) போட்டியில் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த ஜெர்னில் அனிகா இரு தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார்.

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என இரு போட்டிகளில் வென்று, இரு தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் போபால் பெண் பேட்மிண்டன் அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.