சென்னை

மிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்துக் கொள்ள வாக்காளர்களுக்கு அவகாசம் அளிக்கபட்டது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திருத்தங்கள் செய்துக் கொள்ள வசதியாக வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு உள்ளிட்ட பல தவறுதல்களை நீக்கி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி வழக்கம் போல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிழை திருத்தல் பணிகள் அதிகம் இருந்ததால் தாமதமாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இறுதிப்பட்டியல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிடுள்ளார். தற்போது சென்னை மாவட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 38,18,999 பேராக உள்ளது.

இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மற்ற மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கலிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் வரும் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,23,197
ஆண்கள் – 2,92,56,960
பெண்கள் – 2,98,60,765
மூன்றாம் பாலினத்தவர் – 5,472

தமிழ் நாட்டிலேயே சோழிங்கநல்லூர் தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர் ஆண்கள் – 311,102 பெண்கள் – 307,518 மூன்றாம் பாலினத்தவர்கள் 75

சென்னையில் அதிகம் வாக்காளர்கள் உள்ள தொகுதி வேளச்சேரி

குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி துறைமுகம்