கடந்த மாதம் தனியார் திரையரங்கில் நடைபெற்ற இயக்குநர் சங்க குழு கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மாதம் கழித்து இயக்குநர் சங்கப் பதவியை ராஜினாமா செய்தார் பாரதி ராஜா.

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தல் சென்னை வடபழனியில் நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் நிலையில், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, பாக்யராஜ் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

3000 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில், 2400 வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது .

[youtube-feed feed=1]