சென்னை :

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1912 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,56,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,466 பேர் உயிர் இழந்து 7,27,752 பேர் குணம் அடைந்து தற்போது 17,154 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,08,179 பேர் பாதிக்கப்பட்டு 3,762 பேர் உயிர் இழந்து 1,99,125 பேர் குணம் அடைந்து தற்போது 5,292 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 46,237 பேர் பாதிக்கப்பட்டு 585 பேர் உயிர் இழந்து 44,683 பேர் குணம் அடைந்து தற்போது 969 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 45,737 பேர் பாதிக்கப்பட்டு 695 பேர் உயிர் இழந்து 44,168 பேர் குணம் அடைந்து தற்போது 874 பேர் சிகிச்சையில் உள்ளனர்.