மதுரை :
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்குதீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில், தமிழக துணைமுதல்வரின் தம்பியும், தேனி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவராக இருவருபவருமான ஓ.ராஜா கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர், அவருடன் நெருக்கமாக இருந்தவரகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.