சென்னை:

அதிமுக.வில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் தமிழக எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த வகையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கவனரை சந்தித்து வலியுறுத்தினர்.

இவர்களை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் நாளை (30ம் தேதி) காலை 11 மணிக்கு கிண்டி, ராஜ்பவனில் தமிழக கவர்னரை நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசவுள்ளனர்.

[youtube-feed feed=1]