சென்னை:
 
டெல்லி பயணத்துக்குப் பின்னர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டை கண்டும், அதை தொடர்ந்து தமிழகத்தில் மத்திய அரசின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டு சசிகலா உட்பட மன்ன £ர்குடி கோஷ்டிக்கும், இவர்களது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதன் முதலாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை ச ந்தித்தார். அப்போது வர்தா புயல் பாதிப்புக்கு நிவாரணம், ஜெயலலிதாவுக்கு பாரதரத்னா விருது, நாடாளுமன்ற வளாகத்தில்சிலை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுவையும் மோடியிடம் கொடுத்தார் பன்னீர்செல்வம்.
பின்னர் தமிழகம் மற்றும் அதிமுக நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இவர்களது உரையாடலை கண்டு உடன் சென்ற தம்பிதுரை டென்ஷனாகி வெளியே ஓடிவந்ததாகவும் தகவல் வெளியானது. இதன்பின்னர் டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் தலைகீழாக மாறிவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்களே கூறுகின்றனர்.
 

இதை உண்மை என நிரூபிக்கும் வகையில் கட்சியிலும் ஆட்சியிலும் எந்த பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை போயஸ் கார்டன் சென்று சந்திப்பதை ஓ.பன்னீர்செல்வம் தவிர்த்து வருகிறார். ஏற்கனவே துணைவேந்தர்கள் சந்தித்தற்கே எதிர்கட்சிகள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த காரணத்தை சொல்லி ஓபிஎஸ் தப்பித்து கொண்டாலும், உண்மையான காரணம் வேறு என்றே அதிமுக.வினர் கூறுகின்றனர். சசிகலாவை சந்திப்பதை மத்திய பாஜக அரசு விரும்பவில்லை என டெல்லி பயணத்தில் சுட்டிக்காட்டப்பட்டது இதற்கு காரணம் என்கின்றனர்.
சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் கொழுத்தி போட்டது வேறு வடிவில் வெடித்துள்ளது. அதனால் தான் அந்த பேச்சு அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. மேலும், உதயகுமாரே அந்த கருத்தை திரும்ப பெற்று, இது பன்னீருக்கு எதிரான கருத்தில்லை என்று கூறிவிட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக.வில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் இல்லை. இந்த துணிச்சலில் தான் தலைமை செயலாளர் மீது மத்திய அரசு கை வைத்தது. ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்காது என்றே பலரும கருத்து தெரிவிக்கின்றனர். தலைமை செயலாளர் மீது கை வைத்து பாஜ அரசு பல்ஸ் பார்த்தது. இதற்கு வெற்றி கிடைத்திருப்பதால் இது போன்ற நடவடிக்கை தொடரும் என்றே கூறப்படுகிறது.
இது ஒரு வகையில் பன்னீர்செல்வத்துக்கு சாதகமாகவே இருக்கிறது. அதனால் அவர் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பத £கவே எண்ணத் தோன்றுகிறது. இவருக்கு போட்டியாக முதல்வர் பதவிக்கு கூறப்பட்ட அமைச்சர்கள் தற்போது வருமான வரித் துறை ஹிட் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் மட்டுமின்றி, மன்னார்குடி தரப்பும் அடக்கியே வாசிக்க விரும்புகிறது.
பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்று வெங்கைய நாயுடு வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். இது பன்னீர் செல்வத்துக்கு மேலும் ஒரு பூஸ்ட் சாப்பிட்டது போல் அமைந்துவிட்டது. அதனால், பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் விசுவ £சிகளாக கருதப்படும் தமிழக அரசின் ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் உள்ளிட்ட அதிகாரிகளின் வழிகாட் டுதல் படியே செயல்படுவார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரது செயல்பாட்டில் யார் குறுக்கிட்டாலும், விளைவுகள் எதிர்பாராத வகையில் இருக்கும் என்ற நிலையை பன்னீர் செல்வம் ஏற்படுத்தி வைத்துவிட்டார். அதோடு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தை முதல்வராக அதிமுக.வின் தொண்டர்கள் முதல் சாதாரண மக்கள் வரை ஏற்றுக் கொண்டுவிட்டனர். நீண்ட நாளைக்கு பிறகு ஓடி ஆடி மக்கள் பணி செய்யக் கூடிய ஒரு முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது என்று பெருமை அடைந்து கொள்கின்றனர்
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தை இப்போதைக்கு தேவையில்லாமல் சீண்டிவிடக் கூடாது என்று மன்னார்குடி தரப்பும், இவர்களது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் தரப்பும் முடிவு செய்துள்ளனர்.