சென்னை,
ன்னும் ஓரிரு நாளில் நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுவில் செயல்தலைவராக ஸ்டாலின் தேந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
கடந்த 20ந்தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு, திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் ஒத்தி வைப்பதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற்று இன்று வீடு திரும்பியுள்ள நிலையில், வரும் 28ந்தேதி அல்லது 30ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டப்படும் என  தெரிகிறது.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுவில் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.