ஆந்திரா சென்றடைந்தார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Must read

சென்னை,

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விஜயவாடா சென்றடைந்தார்.

கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திரா சென்றார்.

விஜயவாடா சென்ற தமிழக முதல்வரை ஆந்திர அமைச்சர் வரவேற்றார்.

இன்று பிற்பகல் அமராவதியில்ந டக்கும் பேச்சுவார்த்தையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசவுள்ளார்.

அப்போது தமிழக குடிநீர் தேவைக்காக  அதிக அளவு தண்ணீர் திறந்துவிடும்படி சந்திரபாபு நாயுடுவை அவர் வலியுறுத்துவார் என தெரிகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடும்படி ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article