சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
நடப்பாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் அரசின் துறைசார் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது. மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பாகவும் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]