சென்னை:
தமிழக அரசின், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள்
தமிழ் பண்பாட்டை காப்பாற்ற அரசு உறுதியாக உள்ளது-
ஓபிஎஸ் யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம்
ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது
பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
பொருளாதார வளர்ச்சியின் பயனை ஏழை, எளிய மக்களும் நுகர அரசு வழிவகை செய்து வருகிறது
உற்பத்தி, சேவை துறைகளில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது
சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் உயர்தர சேவைகளை பெறும் வகையில் உட்கட்டமைப்புகளை அரசு மேம்படுத்தி வருகிறது
ஒட்டுமொத்த உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு 51.8 சதவீதம் ஆக உள்ளது
சம்பளம் கொடுக்கும் வகையில் தமிழக அரசுக்கு சுமார் 57 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவு ஏற்படும்
மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் தயார் செய்யும்
ஸ்ரீபெரும்பதூர் அருகே ஒரத்தூரில் அடையாற்றில் நீர்தேக்கம்
மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் தயார் செய்யும்
முதல்கட்டமாக, கோவை, மதுரை மண்டலங்களுக்கான திட்டங்கள் தீட்டப்படும்
இதன் மூலம், பல்வேறு முக்கிய திட்டங்களை முன்னுரிமைப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்குமான வழிவகை – ஒட்டுமொத்த திட்டமிட்ட வளர்ச்சி உறுதிசெய்யப்படும்
திருமங்கலத்தை தலையிடமாக கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி புதிய வருவாய் கோட்டம்
சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்க ரூ.3958 கோடி ஒதுக்கீடு
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுக் காப்பீடு திட்டம்
புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு
காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு
செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின் கீழ் இதுவரை ரூ.3,074.84 கோடி மதிப்பீட்டில் 1,768 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது
சிவகங்கை கோட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு 622 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.715 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்
காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு
ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகளிடம் நிதியுதவி கோருவதற்கான விரிவான திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது
ரூ.420 கோடியில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பத்தில் மீன் பிடி துறைமுகம் அமைக்க அனுமதி
1,986 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு
பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்
அண்ணா பல்கலை.யிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதியுதவி வழங்கப்படும்
பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு
உலக வங்கி கடனுதவியுடன் ரூ.2,685.91 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்
இத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள், கருவிகள், பொருட்கள் வழங்கப்படும் – சிகிச்சை நெறிமுறைகளும் உருவாக்கப்படும்
இத்திட்டத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.247 கோடி ரூபாய் செலவிடப்படும்
பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு
ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் ரூ.5,890 கோடி செலவில் 12,000 புதிய பிஎஸ்-4 தரத்திலான பேருந்துகள், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் திட்டம்
ரூ.116 கோடி செலவில் நீரோடி, மார்த்தாண்டத்துறை ஆகிய இடங்களில் கடலரிப்பு தடுப்பான்கள் அமைக்க அனுமதி
80 ஆழ்கடல் மீன் பிடி குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 தொலைபேசிகள் வழங்கப்படும்
நீர்நிலைகளை பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு
அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது
அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
அத்திக்கடவு – அவினாசி திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டிற்கு ரூ.132.80 கோடி செலவில் சூரிய ஒளி மின்திட்டம்
வரும் நிதி ஆண்டில் சூரிய மின் சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் – 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண் திட்டத்தை ரூ.1546 கோடி ரூபாயில் செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி
கொடுங்கையூர் – பெருங்குடி குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் அலகினை தனியார் பங்களிப்புடன் ரூ.5259 கோடியில் செயல்படுத்த பரிசீலனை
நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கூட்டுகுடிநீர் திட்டங்களை மேற்கொள்ள ரூ.1558.87 கோடி ஒதுக்கீடு
2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கும் நகர்ப்புர வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்ளை விரைவில் வெளியிடப்படும்
வரும் நிதியாண்டில், 1,986 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு
பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
வரும் நிதியாண்டில் ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்
அண்ணா பல்கலை.யிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதியுதவி வழங்கப்படும்
பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு
உலக வங்கி கடனுதவியுடன் ரூ.2,685.91 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்
இத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள், கருவிகள், பொருட்கள் வழங்கப்படும் – சிகிச்சை நெறிமுறைகளும் உருவாக்கப்படும்
இத்திட்டத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.247 கோடி ரூபாய் செலவிடப்படும்
பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு
ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் ரூ.5,890 கோடி செலவில் 12,000 புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் திட்டம்
முதல்கட்டமாக 500 மின்சாரப் பேருந்துகளை சென்னை, கோவை, மதுரையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்
2000 பிஎஸ்-6 பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும்
தேனி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ரூ.1,125 கோடி மதிப்பீட்டில் 250 மெ.வா. திறன்கொண்ட மிதக்கும் சூரியசக்தி மின்திட்டங்கள்
ரூ.2,350 கோடி மதிப்பீட்டில் 500 மெ.வா. திறன்கொண்ட கடலாடி மிகஉய்ய சூரிய மின்னழுத்த பூங்கா திட்டம்