தமிழக பட்ஜெட்2019-20: தமிழக விவசாயிகளுக்கு ரூ.10ஆயிரம் கோடி பயிர்க்கடன்

Must read

சென்னை:

மிழக அரசின், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள்

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு

பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும்

வேளாண்மை – தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு

வேளாண்மைத்துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.10,550 கோடி ஒதுக்கீடு

வரும் நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது

பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை கொண்டு ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம்

உரிய காலத்தில் பயிர்க்கடன் திரும்ப செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது

வரும் நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர்

விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு

செய்யப்படும் விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும்-

தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு

ரூ.50 கோடி ஒதுக்கீடு கால்நடை பராமரிப்பு துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம்

ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம்

விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம்

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு

சென்னை, கோவை, மதுரையில் முதல்கட்டமாக 500 மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ரூ.1031 கோடி ஒதுக்கீடு

சென்னையில் ரூ. 2000 கோடி செலவில் மல்டி பார்க்கிங் கட்டிடம் அமைக்கப்படும் 2 லட்சம் கார்கள், 4 லட்சம் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்

நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வேட்டி, சட்டை இலவசமாக தரப்பட்டது

சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது-

வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு

குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு

வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு
தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும்

2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ16,315 கோடியாக குறையும் – துணை முதலமைச்சர்

வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது

வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு 1,031 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பள்ளிக்கல்வித்துறைக்கு 28,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு

உயர்கல்வித்துறைக்கு 4,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சுகாதாரத்துறைக்கு 12,563 கோடி ரூபாய் ஒதுக்கீடு

விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம்

 

More articles

Latest article