சென்னை,
தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மத்திய அரசு நிறுவனமன பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் இயக்குனர் பதவி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து பாரதியஜனதாவின் அழுத்தம் அதிகரித்து வருகிறது. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாரதிய ஜனதா தற்போது அரசு பதவிகளிலும் தனது மூக்கை நுழைத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக எச்.ராஜா, சாரணர் இயக்க தலைவராக போட்டியிடுகிறார். இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் கெமிகல் கார்ப்பரேஷன் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் இயக்குனராக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.