தமிழகம்: நாளை பந்த்! கார், லாரி, பஸ், ஆட்டோ ஓடாது, கடைஅடைப்பு, ரெயில் மறியல்! பள்ளி-கல்லூரி விடுமுறை..?

Must read

1baaadht
சென்னை:
நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆட்டோ, கார், தனியார் பேருந்துகள், வேன்கள், லாரிகள் இயக்கப்படமாட்டாது. வணிகர் சங்கங்கள் கடை அடைப்பு நடத்துகின்றன. டீகடை கூட திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள், கல்லூரிகளும் இயங்காது என தெரிகிறது. பெரும்பாலான பள்ளி, கல்லூரிக்கு இயக்கப்படும் தனியார் வாகனங்கள்  இயக்கப்படாது என அறிவித்து உள்ளது. மீறி இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தடுத்து நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அரசு பஸ்களும் ஓடாது என தெரிகிறது. அனைத்து தொழிற்சங்கத்தினரும் பஸ்களை இயக்க மாட்டோம் என தெரிவித்து உள்ளனர்.
அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்குபெறுவார்கள் என தெரிகிறது. நாளை விடுமுறை எடுத்துக்கொண்டு முழு அடைப்பில் பங்குபெறுவார்கள் என தெரிகிறது.
முழு அடைப்பையொட்டி,  ஆங்காங்கே ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் அறிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆளும் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சியினரும், சமுக அமைப்புகளும் முழுமையான  ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காவிரியில் நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் தமிழக பதிவெண் கொண்ட 100க்கும் மேற்பட்ட பேருந்துகள், லாரிகள், தனியார் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தமிழ் பேசியதாக கூறி வெவ்வேறு இடங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி முழு அடைப்பில் கலந்து கொள்ளப்போவதாக வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளனர். சென்னையில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழுக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனையும் நடைபெற்றது. இதில் மத்திய குழு உறுப்பினர்கள் பிரகாஷ் ஹாரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆகவே, பொதுமக்களே உஷாராக இருங்கள். நாளைக்கு தேவையானவற்றை இன்றே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை நாளை வெளியே செல்வதை தவிருங்கள்.  ரெயில் பயணத்தை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்.  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதையும் தவிர்த்திடுங்கள்.

More articles

Latest article