சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து, வரும் 12ந்தேதி சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக சட்டப்பேரவையின் 2024-25 பட்ஜெட் கூட்டத்தொடர் மானிய கோரிக்கை விவாதமின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து மத்தியில் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றுள்ள நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதன்படி, 24-ந்தேதி முதல் பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இநத் நிலையில், இந்த பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்பது தொடர்பாக, அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் 12ந்தேதி (புதன்கிழமை) சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.