சென்னை:
ட்டசபை விவாதத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியை பற்றி பேசியதால் திமுக சபையை விட்டு வெளிநடப்பு செய்தது.
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் நரசிம்மன் பேசும்போது “முன்னாள் முதல் – அமைச்சர் கருணாநிதி” என பெயரை குறிப்பிட்டு பேசினார்.
இதை கண்டித்து  தி.மு.க. உறுப் பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே சபாநாயகர் குறுக்கிட்டு, “தி.மு.க. உறுப் பினரின் பெயரை மாண்புமிகு கருணாநிதி என்று மரியாதையுடன்தான் குறிப் பிட்டார். இதில் தவறு ஒன்றும் இல்லை” என்றார்.
உடனே துரைமுருகன் எழுந்து, “முதலமைச்சர் பெயரை நாங்கள் குறிப்பிட்டு பேசலாமா?” என்று சபாநாயகரிடம் கேட்டார்.

திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

இதற்கு அ.தி.மு.க. உறுப் பினர்கள் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.
இதன் காரணமாக சபையில் சிறிது நேரம் கூச் சல்-குழப்பம் ஏற்பட்டது.
சபாநாயகர்:- சட்டமன்ற  உறுப்பினர் ஒருவரின் பெயரை மரியாதையுடன் குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால் முதலமைச்சரை   பெயர் சொல்லி குறிப்பிடக்கூடாது. முதலமைச்சர் என்று மட்டும்தான் கூற வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறி இருக்கிறேன். அதைத்தான் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின்:- சபையில் முதலமைச்சர் பெயரை குறிப்பிடக்கூடாது என்று சபாநாயகர்  கூறுகிறார். அப்படி எந்த விதியும் கிடை யாது. முன்னாள் முதலமைச்சரை மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்  என்றார்.
நரசிம்மன்  பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை  நீக்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சபையை விட்டு வெளியே வந்த பிறகு மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் கலைஞர் 5 முறை முதலமைச்சராக இருந்தவர். 13 முறை எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறார். ஒருமுறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. அவர் மூத்த தலைவர். எனவே அவரது பெயரை  குறிப்பிடாமல் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.  ஆனால் சபா நாயகர் முன்னாள் முதலமைச்சரை பெயர் சொல்லி அழைக்கலாம் என்கிறார்.
ஆனால் இன்றைய முதலமைச்சரை சபையில் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்கிறார். முதலமைச்சரின் பெயரை சொல்லக்கூடாது என்று சட்ட மன்ற விதி ஏதும் இல்லை. எனவே சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும்  வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
தமிழக சட்டப்பேரவையில் இனி எதுவாக இருந்தாலும் வெளிநடப்பு செய்ய மாட்டோம் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்தவாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.  சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் அனைவரும் சபைக்கு சென்றனர்.