சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
சபையில் இன்றைய விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பேசும் போது ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் பற்றி விமர்சித்தார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக சபை அமளிக்காடாக மாறியது. திமுக உறுப்பினர்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும் அதிமுக உறுப்பினர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் பேரவைத் தலைவர் தனபால் அதிமுக உறுப்பினர் பேச்சை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக உறுப்பினர்கள் குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் திமுக உறுப்பினர்களை சபையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயகர் அவைக்காவலர்களை மூலம் திமுக உறுப்பினர்களை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும்எ திர்ப்பு தெரிவித்தனர். இதனால் காரணமாக இருதரப்புக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. திமுகவினர் பேரவையில் அமர்ந்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து சபைகாவலர்கள், வெளியேற மறுத்த திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வெளியேற மறுத்த திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினையும் காவலர்கள் கட்டாயப்படுத்தி குண்டுகட்டாக தூக்கி வந்து அவைக்கு வெளியே விட்டனர்.
துரைமுருகனை தூக்கி வெளியேற்றிய போது அவர் மயக்கமடைந்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து சபாநாயகருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் சபாநாயகருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதையடுத்து நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்று திமுக உறுப்பினர்கள் 1 வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சட்டப்பேரவை தொடரில் திமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவது இதுவே முதல் முறை.