சென்னை:

ருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடை பெற்று வருகிறது. இன்று 2வது நாள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட மறைந்த உறுப்பினர்களுக்கு  இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கியது. வழக்கமான நடைமுறைகள் தொடங்கியதும்,  கூட்டத்தில்  கருணாநிதி உள்பட  12 மறைந்த சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு  இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கருணாநிதியின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அதில்,  ‘‘கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை.  இலக்கியம், கவிதை என அனைத்திலும் சிறப்புடன் பணியாற்றியவர்,  அவர் சமூக நீதிக்காக போராடியவர். தனது உடன்பிறப்புகளுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதி யுள்ளார்.

சுதந்திர தினத்தில் மாநில முதல் அமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர். அரசியல் எல்லையை கடந்து முன்னாள் முதல் அமைச்சர்களான மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கருணாநிதி மீது அன்பு கொண்டிருந்தனர்” என கூறினார்.