சென்னை : முறைகேடு புகார் காரணமாக மாவட்ட நீதிபதிகள் மூவரை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ய இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு பதிவாளர் கே.அருள், சென்னை குடும்ப நல நீதிமன்ற கூடுதல் முதன்மை நீதிபதி டி.லீலாவதி, திருவண்ணாமலை மாவட்ட தலைமை நீதிபதி நடராஜா ஆகியோரே பதவிநீக்கம் செய்யப்பட உள்ள நீதிபதிகள் ஆவர்.

இவர்களில் அருள் மற்றும் லீலாவதி ஆகியோரின் பணிக்காலம் நிறைவடைய இருக்கிறது.  ஆனால் திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி நடராஜா, இன்னும் 20 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் போதே பணிநீக்கம் செய்யப்பட இருக்கிறார்.

நீதிபதி அருள், இந்திய தலைமை நீதிபதியிடம் இருந்து இரு முறை நற்சான்றிழ் பெற்றவர் ஆவார். இவர்கள் மீது 50 புகார்கள் நிலுவையில் உள்ளன. இவர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், நீகிபதிகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெரும்பாலானோர் ஆதரவு அளித்ததை அடுத்து இவர்கள் மூவரையும்  பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீதித்துறை அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்டது, லஞ்சம் பெற்றது உள்ளிட்டவை இந்த மூன்று நீதிபதிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆகும்.  இதற்கு முன் 2015 ல் 4 மாவட்ட நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.