சென்னை:
கனிமொழி வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தொடர்ந்து வழக்கை, வாபஸ் பெறுவதாக அறிவித்த நிலையில், வாபஸ் குறித்து பத்திரிகைகளில் வெளியிட தமிழிசைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இதையடுத்து, கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் வழக்குகு தொடர்ந்திருந்தார். தற்போது தமிழிசை தெலுங்கானா மாநில கவர்னராக இருந்து வருகிறார். தமிழிசை ஆளுநராக அறிவிக்கப்பட்ட வுடன், கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய தேர்தல் வழக்கை வாபஸ் பெற நீதிபதி அனுமதி வழங்கினார். இதுகுறித்து அரசிதழில் வெளியிடும்படி ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அரசிதழில் வெளியிடப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘இந்த தேர்தல் வழக்கை திரும்ப பெற கனிமொழிக்கு அனுமதி வழங்கியும், இந்த வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக 10 நாட்களுக்குள் ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகளில் தமிழிசை சவுந்தரராஜன் விளம்பரம் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், கனிமொழி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னுடைய வெற்றியை எதிர்த்து சந்தானகுமார் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த வழக்கில் பதில் தருமாறு சந்தானகுமாருக்கு உத்தர விட்டு விசாரணையை அக்டோபர் 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.