சென்னை

மாணவர்களுக்கு தமிழ் மொழியை சிறப்பாக கற்பிக்க மாநகராட்சி  பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இணையம் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. அப்போது தமிழில் பாடம் நடத்த வேண்டி இருதது.  ஆயினும் மாணவர்களால் பிழையின்றி தமிழை உச்சரிக்க கற்றுத் தர ஆசிரியர்களால் இயலவில்லை.  எனவே அந்த நேரத்தில் 500 ஆசிரியர்களுக்கு இது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்த முறை வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது மாநாராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் மற்றும் ஆயுத எழுத்தை எங்கு உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்குச் சரிவர தெரியாததால் அவர்கள் உச்சரிப்பில் பிழை ஏற்படுகிறது. 

இந்தப் பிழை 6, 7, 8 ஆம் வகுப்புக்களில் படிக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுகிறது.  எனவே அவற்றைத் தவிர்க்க மாணவர்களுக்குச் சரியான தமிழைக் கற்பித்தல் அவசியமாகிறது.  இந்த பயிற்சியின் மூலம் ஆசிரியர்களால் மாணவர்களுக்குச் சரியான முறையில் சிறப்பான  தமிழ் கற்பித்தலை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.