டில்லி

டில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் பாடப்பிரிவுகள் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

தலைநகர் டில்லியில் வசிக்கும் பல லட்சம் தமிழ் குடும்பங்களுக்காக 7 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.   இந்த மாணவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வருவோர் உயர் கல்விக்காக டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடப்பிரிவுகள் உள்ளன.  பல்லாண்டுகளாக இங்கு தமிழ் மொழியில் சான்றிதழ், பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வு படிப்புக்கள் உள்ளன

டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்கள் ஓய்வு பெற்ற 10 ஆண்டுகளுக்கு மேலாகின்றன.  ஆனால் இதுவரை அந்த இடங்கள் நிரப்பப்படவில்லை.   ஏற்கனவே 2 கல்லூரியில் தமிழாசிரியர்கள் ஓய்வு பெற்றதால் அந்த பணியிடங்கள் வேறு மொழிகளுக்கு மாற்றப்பட்டு அந்த கல்லூரியில் தமிழ் பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.   இந்த இரு மகளிர் கல்லூரியில் தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்பை பெண்கள் இழந்துள்ளனர்.

தவிரப் பல்கலைக்கழகத்திலேயே உள்ள 4 பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக  இருந்தும் எவரும் பணி அமர்த்தப்படவில்லை.  இதனால் மேலும் பல கல்லூரிகளில் தமிழ் பாடப்பிரிவுகள் மூடப்படும் அபாயம் உள்ளது.  இது குறித்து தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதி நினைவூட்டியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]