சென்னை:

மெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. இருக்கைக்கு தேவையான ரூ.33 கோடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு நிதித் தேவைப்படும் நிலையில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழ் இருக்கைகள் அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ழ என்ற அமைப்பு சார்பில் தமிழ் இருக்கைகளுக்காக ரூ.19 கோடியை செலுத்தவும் தமிழக முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தமிழ் இருக்கைகளுக்காக தமிழக அரசும், ழ அமைப்பும் செலுத்திய தொகை போக, எஞ்சிய தொகையை தமிழ் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் திரட்டவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

உலகின் பழைமையான மொழிகளுக்கெல்லாம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனித் துறை உள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு என இதுவரை தனித்துறை  இல்லை.

தமிழுக்குத் தனித்துறையைத் தொடங்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் அறிஞர்களால் கோரிக்கை வைத்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு  வந்தது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை தொடங்க வேண்டும் என்றால்,  ரூ.42 கோடி வழங்க வேண்டும். இதில் ரூ. 21 கோடியை உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் அமெரிக்கவாழ் தமிழ் மக்களும் நிதியாக தந்து உதவி புரிந்துள்ளனர். மேலும் தேவைப்படும்  ரூ. 21 கோடியை வரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என ‘ஹார்வர்ட் தமிழ் இருக்கை’ அமைப்பின் தலைவரா ஜானகிராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு சார்பாக ரூ.10 கோடி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.