கிளநொச்சி:
“இதுவரை அமைதியாக இருந்த தமிழ் மக்கள் தற்போது தங்களுடைய தேவைகளை அபிலாசைகளை வெளிப்படுத்தும்போது, நாட்டின் தென்பகுதி உணர்ச்சிவசப்பட்டு எழுகின்றது. நான் இனவாதத்தை தூண்டுவதாகச் சொல்கிறது” என்று இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
download
கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், இலங்கை வடமாகாண முதலமைச்சர் தலைமையில் எழுக தமிழ் என்ற மகுடத்தில் பேரணி நடைபெற்றது.
யுத்தத்தின் பின்னர் நிறைவேற்றுவதாகச் சொன்ன தங்களது கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் மக்கள் இந்த பேரணியை நடத்தினர்.
அந்த பேரணியின் போது, விக்னேஸ்வரன் பலவித விசயங்கள் குறித்து பேசினார். அபு்போது அவர், “பௌத்த மக்கள் குடியிருக்காத இடங்களில் தமிழ் மக்களுடைய பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலைகளையும், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையும் அகற்ற வேண்டும்” என்றும் பேசினார்.
இதையடுத்து, “விக்னேஸ்வரன் இனவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். தற்போது ஏற்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகளைக் குழப்புகிறார். இனவாத நஞ்சை தமிழ் மக்கள் மனங்களில் விதைத்திருக்கின்றார்” என்று பொதுபலசேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பினர் தெரிவித்தது. எழுக தமிழ் பேரணியை கண்டித்து நேற்று நேற்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் கண்டனப் பேரணியொன்றையும்  நடத்தியது.
மேலும், தென்பகுதியைச் சேர்ந்த பல்வேறு சிங்கள அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும்கூட, விக்னேஸ்வரன் இனவாதத்தைத் தூண்டி பிரிவினைவாத கோஷம் எழுப்பியிருப்பதாக கடுமையாக  விமர்சித்தனர்.
இன்று கிளிநொச்சியில் கூட்டமொன்றில் பேசிய விக்னேஸ்வரன், இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பதில் கூறினார்ச
“இதுவரையில்  அமைதியாக இருந்த தமிழ் மக்கள், தற்போது தங்களுடைய தேவைகளுக்காக “எழுக தமிழ்” பேரணியின் குரல் கொடுத்தனர். இதற்காகத்தான் என்னை விமர்சிக்கின்றார்கள்.
நாங்கள் வாய் மூடி மௌனிகளாக இருந்ததால், எங்களுக்குப் பிரச்சினைகள் இல்லை என்றும  நடப்பவையெல்லாம் திருப்தியாக இருக்கின்றது என்றும் அவர்கள் எண்ணியிருந்தார்கள். இப்போது வாய்திறந்து எங்களுடைய எதிர்பார்ப்புக்களை தேவைகளை வெளியிடும்போது அதனைப் பலரும் குறைகூறுகிறார்கள். இப்போது மவுனத்தை கலைத்ததன் மூலம் உண்மை நிலைமை வெளிப்பட்டுள்ளது”  என்று விக்னேஸ்வரன் தெரிவித்தார்.