அமெரிக்கா: ஆபாச படத்தில் நடித்த, அதிபர் வேட்பாளர்!

Must read

நியூயார்க்:
திர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளரான டிரம்ப், ஆபாச படத்தில் நடித்திருக்கும் தகவல் வெளியாகி அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவலில்  விரைவில் அதிபர் தேர்தல் வர இருக்கிறது.  இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன்  குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர்  போட்டியிடுகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இருவர் பற்றியும் பரஸ்பரம் எதிர் தரப்பினர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

டிரம்ப்
டிரம்ப்

இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் பற்றி தற்போது வெளியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2000ம் ஆண்டில், டிராம்ப் ஆபாச படம் ஒன்றில் நடித்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்தான் அது.
“வீடியோ சென்டர்போல்டு “ என்ற அந்த ஆபாச படத்தில், ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக நடித்துள்ளனர். ஆனால் உடலுறவு காட்சிகள் எதுவும் கிடையாது.
அந்த ஆபாச படத்தில் டொனால்டு டிரம்ப் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். ஒரு மதுபாட்டிலை திறந்து அதில் இருந்து வெளியேறும் நுரையை ஆண்கள் மீது  டிரம்ப் தெளிப்பதாக ஒரு காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஹிலாரி கிளிண்டனுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் உலக அழகியான அலிசியா மச்சாடோ என்பவர் முன்பு ஆபாச படத்தில் நடித்துள்ளார் என டொனால்ட் டிரம்ப் தினங்களுக்கு முன்னர் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப் மீது இப்படியோர்  விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article