டில்லி :

மிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சித்திரைத் திருநாளான இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில், தமிழக மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மிக பெரியோர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியும் தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்.

இவ்வாறு  மோடி தனது டுவிட்டர் வலைதளத்தில்  பதிவு செய்துள்ளார்.

மேலும் இன்று விஷு பண்டிகை கொண்டாடும் கேரள மக்களுக்கும் ட்விட்டரில் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புத்தாண்டு நல்வாழ்த்துகள் என டுவிட் செய்துள்ளார்.

 

[youtube-feed feed=1]