சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த சென்னை மாநகராட்சி மீதான வழக்கில், இதுகுறித்து  பரிசீலிக்க 4வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் கடைகள் உள்பட வணிக நிறுவனங்கள் மாநகராட்சியிடம் உரிமம் பெறுவது கட்டாயமாகும். அதன்படி சென்னை மாநகராட்சி பகுதியில் சுமார் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இருமொழி கொள்கைகையை வலியுறுத்தும் வகையில்,   மே 30ஆம் தேதிக்குள்இ அனைத்துகடைகளும்  தமிழில் பெயர் பலகை வைக்க  வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.  மேலும்,   நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்

ஆனால், வணிக நிறுவனங்கள், வேறு மாநில வாடிக்கையாளர்கள், மற்றும் வட மாநில  சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு, தமிழ் எழுத்துக்களை சிறியதாகவும், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள்  வைத்துள்ளனர்.  மேலும் வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும்,  பாரிமுனை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.  இது தொடர்பாக சிலர் கொடுத்த புகார்களின் பேரில்,  கடை பெயர்களை தமிழில்தான் வைக்க வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டது.  இதற்கான அவகாம் மே 30ந்தேதி வரை வழங்கப்பட்டது. இந்த உத்தரவை மீறும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்தது.

சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவை எதித்தும, அதற்கு மேலும்  கால அவகாசம் வழங்க கோரி மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அதுவரை தமிழில் பெயரை பலகை வைக்காத கடைகள் கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாதுஎன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது