சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் 3 அமைச்சர்கள் இணைந்து பேட்டி கொடுத்தனர்.
தமிழ்நாட்டில் வருவாய், நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது என்றும், ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியதுடன், ரூ.10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதுடன், 52.07 மில்லியன் டாலர் ஏற்றுமதி உயர்வு பெற்றுள்ளது என்நனர்.
மேலும் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் தொழில்முதலீட்டை ஈர்க்க 5வது முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முறை ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு 10 நாட்கள் பயணமாக சென்று, பொருளாதார முதலீட்டை ஈர்த்து வருகிறார். முதல்வரின் வெளிநாடு பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், இதுவரை வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் தொலைநோக்குத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அமைச்சர்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், சிவசங்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, ,
கொரோனா கால நெருக்கடியில் போர்க்கால அடிப்படையில் திராவிடமாடல் அரசு செயல்பட்டது. நான்கரை ஆண்டு காலத்தில் பெரும் இயற்கை சீற்றத்தை சந்தித்துள்ளது. ஒன்றிய அரசின் பங்களிப்பின்றி தமிழ்நாடு அரசு இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டது.
நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதிப்பங்களிப்பு முறையாக இல்லாத நிலையில் கூட தமிழ்நாடு அரசு சிறப்பாக அதனை எதிர்கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்தை எட்டி சாதனை படைத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி .07% இருந்த நிலையில் திமுக ஆட்சியில் 11.19% வளர்ச்சி அடைந்தது.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514ஆக அதிகரித்துள்ளது.

நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரட்டை இலக்க அளவில் வளர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையும் குறைக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையும் 3% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
. உலக அளவில் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.10.28 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32.23 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
52.07 மில்லியன் டாலர் அளவுக்கு நம் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 10.28 லட்சம் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது; 32 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
3 லட்சம் பேருக்கு நான் முதல்வன் உள்ளிட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணிகள் வழங்கப்பட்டுள்ளன3 லட்சம் பேருக்கு நான் முதல்வன் உள்ளிட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணிகள் வழங்கப்பட்டுள்ளன
திமுக ஆட்சியில் 16 நியோ டைடல் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. 45ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 45,000 கி.மீ. தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.7,658 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியில் 70,400 கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 89 புதிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சொல்லாத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை 9.2சதவீதம் அதிகரித்துள்ளது.
காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் திட்டம் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. . காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை 9% உயர்ந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருவது 98%-ஆக உயர்ந்துள்ளது.

4,500 விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. 76 சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன
3700 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன; 2200 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. விடியல் பயணத்தில் தினசரி சராசரியாக 65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 3,700 புதிய பேருந்து வாங்கப்பட்டுள்ளன. 2,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
. ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
ரூ.6.158 கோடியில் வடசென்னையில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
மத்திய அரசிடம் 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ள முடியாதவையாக உள்ளது.
மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம். மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
ரூ.6,000 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 235 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
பல நெருக்கடிகளை தாண்டி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறினர்.