சென்னை:
மிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை அறுவடை நடந்து வரும் நிலையில் சம்பா பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் 149 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன . கீவளூரை அடுத்துள்ள பட்டமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டியளித்தார் அப்போது, இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதியே காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி செய்யப்பட்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளது என்றார்.

செப்-30 ஆம் தேதிவரை தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 32 லட்சத்து 41 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 6 லட்சம் விவசாயிகளுக்கு மேல் பயனடைந்துள்ளதாகவும் கூறினார். மேலும் 6 ஆயிரத்து நூற்றி 30 கோடி ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தபட்டுள்ளது என்றும் இந்த பணம் 24 மணி நேரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது என்றும் கூறிய அவர் தமிழகத்தில் இ-பேமண்ட் கொண்டு வந்ததில் இருந்து விவசாயிகள் பணம் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை