சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 11 நகராட்சிகளும் தேர்வுநிலை மற்றும் முதல்நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில்,  தற்போது,  உடுமலை, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், மாங்காடு, குன்றத்தூர், அரியலூர், அம்பாசமுத்திரம், பழனி, திருச்செங்கோடு உள்பட 11 நகராட்சிகள் உள்ளன.

இந்த  நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி சில நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சிகளாகவும், சில நகராட்சிகள் முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.  மாநில அரசு நிர்ணயித்துள்ள வருவாய் அளவுக்கு உட்பட்டு அந்த நகராட்சிகள் இருப்பதால் அவற்றின் தரம் உயர்த்தியுள்ளது.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

“சிறப்புநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த அதன் ஆண்டு வருவாய் ரூ.15 கோடிக்கு மேலாகவும், தேர்வுநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.15 கோடி வரையிலும், முதல்நிலை நகராட்சியாக நிலை உயர்த்த ரூ.9 கோடி வரையிலும், இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.6 கோடிக்கு மிகாமலும் வருவாய் அளவு இருக்க வேண்டும்.

சிறப்புநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த அதன் ஆண்டு வருவாய் ரூ.15 கோடிக்கு மேலாகவும், தேர்வுநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.15 கோடி வரையிலும், முதல்நிலை நகராட்சியாக நிலை உயர்த்த ரூ. 9 கோடி வரையிலும், இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.6 கோடிக்கு மிகாமலும் வருவாய் அளவு இருக்க வேண்டும்.

இந்நிலையில், திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேசுவரம், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளைத் தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மாநில அரசு நிர்ணயித்துள்ள வருவாய் அளவுக்கு உட்பட்டு அந்த நகராட்சிகள் இருப்பதால் அவை தரம் உயர்த்தப்படுகின்றன”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.