சென்னை :
பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லுாரிகளில் உள்ள காலியிடங்களில், புதியவர்களை நியமிக்க கடந்த 2017ம் ஆண்டு தமிழகஅரசு தடை விதித்தது. தற்போது, 2 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தடையை விலக்குவதாக அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக 13 அரசு பல்கலைக்கழகங்களில் சுமார் ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் காலியிடங்களை நிரப்ப முடிந்தால், 13 பல்கலைக்கழகங்கள் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (என்.ஐ.ஆர்.எஃப்) தங்கள் நிலையை மேம்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அணாணமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கைப்பற்றிய நிலையில், அங்கிருந்த கூடுதல் ஊழியர்களை பல்வேறு பல்கலைக்கழகங்களுகு மாற்றி நடவடிக்கை எடுத்தது. அதைத்தொடர்ந்து, எந்தவொரு பல்கலைக் கழகங்களும் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கக்கூடாது என தடை விதித்திருந்தது.
பல்கலைக்கழகங்களில் தகுதியற்ற ஆசிரியர்கள் பணியாற்றுவதாக உச்சநீதி மன்றம் கண்டித்திருந்த நிலையில், யுஜிசியும் ஆசிரியர் நியமனத்தை தடை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்த புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்தஆண்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 5000க்கும் மேற்பட்டவர்கள் பணியின்றி சம்பளம் வாங்குவது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, 547 பேராசிரியர்களும், 1,500 ஊழியர்களையும் மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிட்டிருந்தால், அதை திரும்பப்பெற வேண்டும். மீறி, புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட்டால், அந்த பல்கலைக்கழகத்திற்கான நிதி மற்றும் மானிய தொகை கிடைக்காது என பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு, உயர் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில்,, “உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை 25.09.2018 தேதியிட்ட அரசாங்க உத்தரவு வாபஸ் பெறப்பட்டு பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய ஆரம்பிக்கலாம்” என்று அறிவித்து உள்ளது. அனைத்து காலியிடங்களையும் நிரப்ப யுஜிசி 100 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பதவிகளில் 250 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு கடந்த 2014 முதல் ஆட்சேர்ப்பு இல்லை. என்றும், தற்போது காலியிடங்களை நிரப்ப கல்லூரி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பெரும்பான்மையான அரசு பல்கலைக்கழகங்கள் இன்னும் தங்கள் ஆட்சேர்ப்பு பணியைத் தொடங்கவில்லை.
பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்புக்கான தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் என்.பசுபதி வரவேற்றுள்ளார்.
“முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், பல்கலைக்கழகங்கள் ஆட்சேர்ப்பு பணியை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்த வேண்டும். தகுதி அடிப்படையில் பதவிகளை நிரப்ப வேண்டும், கூறி உள்ளார்.