மும்பையில் உள்ள ‘புராஜக்ட்ஸ் டுடே’ என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கை யின்படி, ஊரடங்கு நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களின் இடைக்காலத்தில் ரூ.97 ஆயிரத்து 859 கோடி முதலீடுகளுக்கான 1,241 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், பல மாநிலங்களில் மீண்டும் பொருளாதார எழுச்சி பெறும் வகையில் பல்வேறு தொழில்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாட்டிலேயே அதிக முதலீடு பெற்ற மாநிலமாக தமிழகம் அறியப்பட்டுள்ளது.
‘புராஜக்ட்ஸ் டுடே’ என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வடறிக்கை..
நாட்டிலேயே அதிக முதலீடுகளை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழக அரசு சமீபத்தில் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளது.
2வது இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் பிடித்துள்ளது. ரூ.11 ஆயிரத்து 229 கோடி அளவுக்கு புதிய முதலீடுகளைப் பெற்றுள்ளது.
அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, குஜராத், ஒடிசா, ஆந்திர பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் வருகின்றன.
கடந்த ஆண்டு இதே மாதங்களில் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 673 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான 2,500 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
“அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களில் பெரும்பாலானவை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் திட்டங்கள் என்றாலும், ஒரு சில தனியார் திட்டங்களும் உள்ளன, இது மார்ச் 2020 முதல் நாடு பூட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு சாதகமான அறிகுறியாகும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.