சென்னை: விமான சேவைக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நாளை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பயணிகளின் உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா என்ற விவரங்களை பதிவிட வேண்டும். தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை அளிக்கப்படும். இல்லை என்றால் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.