விரைவில் ஏலத்துக்கு வருகிறது தமிழகத்திலுள்ள திருப்பதி தேவஸ்தான சொத்துகள்…

Must read

திருமலை:

மிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு உரிய சொத்துகளை ஏலம் விடப்போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


உலகின் நம்பர் 1 பணக்கார கடவுளான திருப்பதி தேவஸ்தானத்திற்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளன. தமிழகத்திலும் ஏராளமான சொத்துக்கள் உள்ள நிலையில், சில குறிப்பிட்ட சொத்துக்களை விற்க தேவஸ்தானம் தரப்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம்  29ஆம் தேதி நடைபெற்ற தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில்  முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான தமிழ்நாட்டில் உள்ள 23 சொத்துகளை ஏலம்விட முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த சொத்துக்களை விற்பனை செய்ய க இரு குழுக்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் எட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சொத்துகளை விற்பதற்கான நடைமுறைகள் முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article